வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சி போனேன்
பாத புரியாம பயந்து நின்னேன்
நூறு பேர தேடி நீங்க போகல
தொலைந்து போன என்ன
தேடி வந்திங்க
நீர் என்ன மறக்கல என்ன விட்டு விலகல
ஏக்கமுள்ள கண்ணால ஏங்கித்தான் நின்னீங்க
நீர் என்ன வெறுக்கள தள்ளி தூரம் போகல
கால் கடக்க எனக்காக கடல் தாண்டி வந்திங்க
சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க
தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன்
என்ன தேடுவத நீங்க நிறுத்தல
உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல
புதிய துவக்கம் எனக்கு தந்திங்க
உங்க தோளின் மீது சுமந்து வந்திங்க
கல்லெறியும் கூட்டத்தின் முன்னே
என் ஆதரவாய் நின்றவர் நீரே
என் கரைகளெல்லாம் நீக்கினீர்
என் கரம்பிடித்து தூக்கினீர்
உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே
என்னை தள்ளாத தகப்பன் நீரே