காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார்
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார்
கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்வாரே
வானத்தின் பலகணியை திறந்து
இடங்கொள்ளா ஆசிதனை தருவார்
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்
தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார்
நஷ்ட பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு இரண்டு மடங்கு தருவார்