கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே
நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன்
அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன்
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும்
அற்புதம் செய்தீரே
பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை (நினைத்தோரை ) நிந்தை மூடினதே
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே
அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே