ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய்
அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு
பலிக்கும் — ஆ… ஆ…
மகிமைப்படுத்து
வேனென்றாரே
மகிபனின்
பாசம் பெரிதே
மங்காத புகழுடன்
வாழ்வோம்
மாட்சி
பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம்
குன்றிட மாட்டோம்
கரையில்லா
தேவனின் வாக்கு — ஆ…
ஆதி நிலை
ஏகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும்
சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை
திரும்பும் — ஆ… ஆ…
விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும்
கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா
காண்போம் — ஆ… ஆ…
யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும்
சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…