நமது இயேசு கர்த்தரென்று
நாவுகள் யாவும் அறிக்கையிடும்
முழங்கால் யாவும் முடங்கிடும்
அவர் முன் முழங்கால் முடங்கிடும்
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்
அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர்
வல்லமை தேவனை நித்திய தேவனை
ஜாதிகள் யாவும் அறிந்திடுமே
ஊற்றுண்ட பரிமள தைலமவர்
உலகில் வாசனை வீசுபவர்
ஆதியும் அவரே அந்தமும் அவரே
நித்திய நாமம் உடையவரே
வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே
வானோர் தலத்தோர் பணிந்திடுவார்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
பூமியில் கீழானோர் பணிந்திடுவார்