நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
எத்தனை இன்பமே
உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே
உமக்காய் ஏங்குதே
புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான்
வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன்
தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே