நினைத்துப் பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை
தியானிக்குறேன் உம் தயவை
திரும்பிப் பார்க்கிறேன் துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன் உம் அன்பை
துவங்கினேன் ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர் – 2
நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர்
தரிசனம் ஒன்றுதான் அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே – 2
தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர் – 2
ஏங்கிப் பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசீர் எனக்கு தந்தீரே – 2
குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர் – 2
இதுவரை தாங்கின கிருபை இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை இனிமேலும் சுமந்திடுமே – 4