நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன்
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன்
வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன்
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன்
தாயைப்போல என்னை தேற்றுகிறீர்
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர்
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன்