சுவாசமுள்ள யாவுமே
கர்த்தரை துதிப்பதாக
குறைவுள்ள நேரத்தில்
துதியால் நிறைவேன் நான்
தடுமாறும் நேரத்தில்
தளராமல் துதிப்பேன் நான்
வெள்ளம் போல் சத்துரு
என்னை சூழ்ந்தாலும்
துதி என்னும் ஆழியில்
அமிழ்ந்து போவானே
ஸ்வாசம் உள்ள வரை உம்மையே
என்றென்றும் போற்றுவேன்
இயேசுவை
போற்றுவேன் இயேசுவை
பலவீன நேரத்தில்
சோர்ந்து போனாலும்
முழு பெலத்தோடே
உம்மை ஆராதிப்பேனே
என் துதி வெறும் தொனி அல்ல
தகர்த்திடும் ஆயுதம்
என் துதி சத்தத்தாலே
எரிகோக்கள் வீழ்ந்திடும்
ஸ்வாசம் உள்ள வரை உம்மையே
என்றென்றும் போற்றுவேன்
இயேசுவை
போற்றுவேன் இயேசுவை
என் நேசர் உயிரோடு இருக்கின்றாரே
எப்படி பாடாமல் நான் இருப்பேன்
போற்றுவேன் இயேசுவை
உம்ம் வல்ல ஆளுகையைப் போற்றிடுவான்
நீர் மரணத்தை ஜெயித்தவர் என்றுரைப்பேன்
உம் உண்மையாய் என்றென்றும் பாடிடுவேன்
நீர் ஒருவரே உயர்ந்தவர் என்று சொல்வேன்