தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே-2
பாதை எங்கும் உடன் இருந்து
குறைவின்றி காப்பவரே -என்
ஏல் எசேருக்கு நன்றி
உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எசேர் ஏல் எசேர்
அனுதினம் சொல்வேன் நன்றி-2
மேவிபோசேத்தைப்போல
மறந்து ஒதுக்கப்பட்டேன் நான்-2
இராஜாக்களின் பந்தியிலே
உட்கார அழைத்து வந்தீர் -(என்னை) -2
விழுந்த என் கூடாரத்தை
மறுபடி எழுப்பி விட்டீர்-2
ஒருபோதும் தலை குனியா
நாட்களை எனக்கு தந்தீர்-2
பட்சித்த வருஷத்தின் பலனை
மறுபடி எனக்கு தந்தீர்-2
முன்மாரியும் பின்மாரியும்
சரியான நாளில் தந்தீர்-2
இயேசு இராஜா நன்றி
என் இயேசு இராஜா நன்றி
இயேசுவே இயேசுவே
அனுதினம் சொல்வேன் நன்றி