உம் சந்நிதியில் சந்தோஷமே
உம் சந்நிதியில் சமாதானமே
நொறுங்குண்டவரை நீர் பெலப்படுத்துவீர்
சிறைப்பட்டவரை நீர் விடுவிக்கின்றீர்
இயேசையா இயேசையா (3)
உன்னிலே நான் இருக்கிறேன்
உனக்குள்ளே ஜீவிக்கிறேன்
என்றென்றும் கை விடாமல்
மறவாமல் அன்பு செலுத்துகிறேன் (2)
நானும் நீயும் நீயும் நானும்
நாம் ஒன்றாய் இசைந்தால் எல்லாம் நடக்கும் (2)
இனி பயமே இல்லை கவலை இல்லை
உம் சந்நிதியில் நான் இருந்தால் போதும்
உன்னிலே நான் இருக்கிறேன்
உனக்குள்ளே ஜீவிக்கிறேன்
என்றென்றும் கை விடாமல்
மறவாமல் அன்பு செலுத்துகிறேன் (2)
இனி பயமே இல்லை கவலை இல்லை
உம் சன்னிதியில் நான் இருந்தால் போதும் (2)