அதிசயமானவர்
அற்புதம் செய்பவர்
எந்தன் கால்களை
வழுவாமல் காப்பவர்
அதிசயமானவர்
அற்புதம் செய்பவர்
எந்தன் பாதைகளை
சேதமின்றி காப்பவர்
விதைக்கா இடங்களில்
விளைச்சலை தருபவர்
அறுவடை உண்டு
அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே
வறண்ட நிலங்களெல்லாம்
செழிப்பாய் மாறிடுமே
வாடின என் வாழ்வை
வர்த்திக்க செய்பவரே
வெட்கத்தில் விதைத்ததெல்லாம்
இரட்டிப்பாய் வந்திடுமே
கண்ணீரில் விதைத்ததெல்லாம்
விளைச்சலாய் மாறிடுமே
விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்