உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் இயேசையா
உம்மை பாடி பாடி துதிக்க வந்தோம் இயேசையா
உன்னதரே உன்னதரே
உயர்ந்தவரே நீர் உயர்ந்தவரே
உங்கள பாடி பாடி துதிக்க வந்தோம் இயேசையா
உங்கள உயர்த்தி உயர்த்தி பாடவந்தோம் இயேசையா
பாவத்தில் இருந்த என்னை பிரித்தெடுத்தீர்
மகனாய் என்னை மாற்றிவிட்டீர்
இழந்த சந்தோஷத்தை திரும்ப தந்தீர்
தாழ்வில் இருந்த என்னை தூக்கி வைத்தீர்
தயவாய் என்னை உயர்த்தி வைத்தீர்
ராஜாக்கள் மத்தியில் அமரசெய்தீர்