உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே
நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்
என் ஆயுள் (முடியும்)உள்ளவரை
போதித்து நடத்துகின்ற துணையாளரே
கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே
வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
வழி இதுவே என்று நடத்துகிறீர்
கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர்
தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம்
கிருபையினால் என்னை தாங்குகிறீர்