விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்
மண்ணில் வந்தாரே தேவாதி தேவன்
தீர்க்கர் உரைத்த வாக்கின்படி
வந்தார் மேசியா சொன்னபடி
மாளும் மாந்தரை மீட்டிடவே
மீண்டும் ஆளுகை தந்திடவே
அவர் வந்தாரே ஜீவன் தந்தாரே
நம்மை தம்மோடு சேர்த்துக்கொண்டாரே
அவர் வந்தாரே மீட்பை தந்தாரே நம்மை சொந்தமாய் ஆக்கிக்கொண்டாரே
தொலைந்து தூரம் போனபோதும்
தொலைவு பாராமல் ஓடி வந்தார்
தேடி நம்மை கண்டுகொண்டு
தோளில் தூக்கி வைத்துக்கொண்டார்
மேய்ப்பன் கரத்திலிருந்து நம்மை
எவரும் பறித்திட முடியாதே
பாவ சேற்றில் மூழ்கிப்போனோம்
கிருபையாலே மீட்டுக்கொண்டார்
கிழக்கு மேற்கு உள்ள தூரம்
பாவமெல்லாம் நீக்கிவிட்டார்
பாவியாக பார்ப்பதில்லை
நீதிமானாக பார்க்கின்றாரே
புதிய ஜீவிய மார்க்கத்தையே
இரத்தம் சிந்தியே திறந்திட்டாரே
தேவ சந்நிதியில் சேர்ந்திடவே
துணிவை நமக்கு தந்திட்டாரே
தண்டனைத்தீர்ப்பு நமக்கு இல்லை
கிறிஸ்துவோடே சேர்ந்திட்டோமே