பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கைதிடன் நம்மில் பெருகிடுமே (2)
யாவே நீர் என்றும் நம் தேவன்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எங்கள் தஞ்சம்
தலைமுறை தலைமுறையாய்
நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீர் அல்லவோ (2)
மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே (2)
மரணத்தை ஜெயித்தவர்
சத்ருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆள்பவரே (2)
தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே (2)
நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்துவார்
உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை (2)