ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது
இன்று அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வியில்லை
அல்லேலூயா வெற்றியுண்டு-2
எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என்பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்-தோல்வியில்லை
தோல்வியில்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
எனது ஆற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் கூடாரத்தில்
வெற்றிகுரல் ஒலிக்கட்டும்-தோல்வியில்லை
தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைதட்டி பாடுங்கள் – தோல்வியில்லை
என்றுமுள்ளது உமது பேரன்பு
என்றும் பறைசாற்றுவேன்
துன்பவேளையில் நோக்கிக்கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா-தோல்வியில்லை