தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர்
நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க
காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல
ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க
என் குறைவில்லாம் நிறைவாக்கி
வாழ செய்வீங்க-2
அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல
ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல
நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல -2
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க
தடையின்றி செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க