அவர் காற்றையும் கடலையும்
அதட்டிட வல்லவர்
நாம் வாழ்க்கையில் மாற்றத்தை
உருவாக்க சிறந்தவர்
அல்லேலூயா அல்லேலூயா
என்று அவரை நாம் துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
என்று அவரை நாம் போற்றுவோம்
உள்ளனதை அவமாக்கவே
இல்லாதவைகளை தெரிந்து கொண்டீர்
விலையேறப்பெற்ற உம் கிருபையினால்
இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே
பலம் உள்ளதை கண்ணோக்காமல்
பலவீனன் என்னை தெரிந்து கொண்டீர்
ஆகாதென்று தள்ளின கல்
உம் ராஜ்ஜியம் கட்ட தெரிந்து கொண்டீர்