என்னை பலப்படுத்தி ஒத்தாசை தருபவரே
உம் வலக்கரத்தால் தாங்கி தினம் நடத்துபவரே
என் அணுகுல துணையாய் இருப்பாரே
எல்லாத்தீங்குக்கும் விலக்கிக் காப்பவரே
நீர் என் பட்சமாய் இருப்பதினாலே
பயமே இல்லை பதட்டமும் இல்லை
நீர் என் துணையாய் நிற்பதினாலே
கவலையே இல்லை கலக்கமும் இல்லை
ஏழு மடங்கு அக்கினி வந்தாலும்
யெகோவா தேவன் என் பக்கமுண்டு பதட்டமில்லை
மலைகளை நொறுக்கிடுவேன் குன்றுகள் தகர்த்திடுவேன்
எதிரான யோசனைகள் பதராக்கி சிதறடிப்பேன்
சேனைக்குள் பாய்வேன் மதிலை தாண்டுவேன்
புது பெலன் தந்து என்னை நடத்திடும் தெய்வமே
கால்கள் தளர்வதில்லை வழியில் தடையுமில்லை
மான்களைபோல என்னை ஓடச்செய்து உயர்த்திடுவீர்