கையளவு மேகம் தானோ
பெருமழை தந்திடுவார்
திக்குவாயும் மந்தநாவும்
இஸ்ரவேலை நடத்திடுவார்
உருவாக்கும் இராஜனவர்
பெரிய காரியங்கள் செய்திடுவார்
உன்னை காக்கும் தேவனவர்
கைவிடாமல் காத்திடுவார்
கண்கள் காணா அதிசயங்கள் உனக்கு செய்திடுவார் என் இயேசு
காது கேளா அற்புதங்கள் நமக்கு செய்திடுவார் -ஓ ஹோ ஹோ
அடிமையாய் இருப்பவனோ செங்கடலை பிளந்திடுவார்
குகைகளில் ஒளிபவனோ இராஜாக்களை எழுப்பிடுவாய்
உருவாக்கும் இராஜனவர் பெரிய காரியங்கள் செய்திடுவார்
உன்னை காக்கும் தேவனவர் கைவிடாமல் காத்திடுவார்
கண்கள் காணா அதிசயங்கள் உனக்கு செய்திடுவார் என் இயேசு
காது கேளா அற்புதங்கள் நமக்கு செய்திடுவார் -ஓ ஹோ ஹோ