போதுமானவரே எல்லா நன்மைக்கும்
காரணர் நீரே
அடைக்கலம் உம் நாமமே
புகழிடம் என்றும் நீரே
என் பெலன் நீரே. என் சுகம் நீரே
ஜீவன் எனக்கு நீரே
என் ஞானம் நீரே என் நீதி நீரே..
பரிசுத்தம் மீட்பும் நீரே
சிறகுகளின் நிழல்தனிலே
ஆரோக்கியம் எனக்கு உண்டே
உம் தழும்புகளால் சுகமானேன்
நீரே என் பெலனானீர்
உம் சமூகத்திலே பேரானந்தமே
மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமே
உம் பிரசன்னத்தில் மலைகளும்
மெழுகுப்போல் உருகிடுமே
உம் வசனத்தின் வெளிச்சத்திலே
வாழ்ந்திடுவேன் என்றுமே
உம் வார்த்தையின் வல்லமையால்
என் வாழ்வு செழித்திடுதே
நன்மையும் கிருபையுமே
என்னை பின்தொடரும்
நான் கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன்