உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி – 2 – உம்மை
கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்
நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே
வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே